செல்போன் வெளிச்சத்தில் போராடிய அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி செல்போன் வெளிச்சத்தில் போராடிய அங்கன்வாடி சத்துணவு ஊழியர்களால் பரபரப்பு

செல்போன் வெளிச்சத்தில் போராடிய அங்கன்வாடி சத்துணவு ஊழியர்கள்

கடந்த நான்கு நாட்களாக ஊதிய உயர்வு காலி பணியிடங்களை நிரப்புதல் காப்பீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக நேற்று காலை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 500க்கும் மேற்பட்ட அங்கன்வாடி சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினார்கள் அவர்களை கைது செய்த காவல்துறையினர் ஒரு திருமண மண்டபத்தில் வைத்து இருந்தனர் நேற்று மாலை அனைவரையும் விடுவித்தனர் ஆனால் அவர்கள் கலைந்து போகாமல் மீண்டும் தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் சாலையில் அமர்ந்து கொண்டு தங்களுடைய செல்போன்களில் லைட்டை ஆன் செய்து தமிழக அரசை கண்டித்து தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது