கோவை ஈஷாவில் மகா சிவராத்திரி விழா பாதுகாப்புத்துறை அமைச்சர் பங்கேற்பு
கோவை ஈசா யோகா மையத்தில் வருகின்ற 15 ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்பதாக ஈஷா நிர்வாகிகள் தகவல்.
கோவையில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் தென் கைலாய பக்தி பேரவையின் தன்னார்வலர் ரவீந்திரன் மற்றும் சரவணன் ஆகியோர் பேசும்போது, வருகின்ற 15ஆம் தேதி ஈசா யோகா மையத்தில் மிகச் சிறப்பாக மகாசிவராத்திரி விழா கொண்டாடப்பட இருப்பதாகவும், இந்த நிகழ்வில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பக்தி பாடல்கள் இரவு முழுவதும் விழிப்புணர்வுடன் இருக்கும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற போவதாகவும், இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் ஈஷாவில் உள்ள ஆதியோகி சிலை முன்பு சத்குருடன் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தனர்.

