நல்ல கதைகளை நம்பி மட்டுமே திரைப்படங்கள் ஓடுகிறது கதாநாயகர்களை நம்பி ஓடவில்லை நடிகர்கள் கோப்ரா பிரதீப்குமார் மற்றும் மகாவிஷ்ணு பேட்டி

கோவையில் நடைபெற்ற திருமண விழாவில் நடிகர்கள் கோப்ரா பிரதீப்குமார் மற்றும் மகாவிஷ்ணு பத்திரிகையாளர் சந்திப்பு

நல்ல கதைகளை நம்பி மட்டுமே திரைப்படங்கள் ஓடுகிறது கதாநாயகர்களை நம்பி ஓடவில்லை  நடிகர்கள் கோப்ரா பிரதீப்குமார் மற்றும் மகாவிஷ்ணு பேட்டி

கதாநாயகர்களை நம்பி படம் ஓடுவதில்லை நல்ல கதைகளை நம்பி மட்டுமே இன்று படங்கள் வெற்றி பெறுவதாக திரைப்பட நடிகர்கள் கோப்ரா பிரதீப்குமார் மற்றும் நடிகர் மகாவிஷ்ணு பேட்டி,

கோவை காளப்பட்டி சாலையில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் சிறப்பு விருந்தினராக வருகை தந்த நடிகர்கள் கோப்ரா பிரதீப்குமார் மற்றும் மகா விஷ்ணு ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் பேசும்போது தற்சமயம் அனைத்து பட்ஜெட் படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைத்து வருவதாகவும் சிறிய படம் பெரிய படம் என்று இல்லாமல் கதை நன்றாக இருந்தால் நிச்சயம் படம் வெற்றி பெறும், ஒரு படம் வெற்றி பெறுவதற்கு கதாநாயகர்கள் தேவையில்லை நல்ல கதைகள் இருந்தால் நிச்சயம் அந்த படம் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தனர். மேலும் தாங்கள் இருவரும் இணைந்து தற்சமயம் விஜய் ஆண்டனி படத்தில் நடித்து வருவதாகவும் கோவை மண்ணின் மைந்தர்கள் என்பதில் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தனர்.